வடக்கிலுள்ள சில இந்து அமைப்புகள் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இந்து சமயியிகளுக்கு தமது சமயம், பண்பாடு பற்றிய எதுவிதமான அறிவும் இல்லையோ எனும் சந்தேகத்தின் அனுமானத்தில் சில விடயங்களை முன் வைக்கிறேன். தெரிந்தவர்கள் எனது முயற்சியை செதுக்கித் தாருங்கள்.
புத்தரோ அவரின் போதனைகளோ இந்துக்களுக்கு புதிதல்ல. புத்தரும் இந்து வேதங்களை அடிக்கடி உசாத்துணைப் படுத்தியுள்ளார். அவரின் கொள்கைகள் மறு பிறப்பை நம்புகின்றது. இது இந்துக்களுக்கு ஒரு புதிய விடயமா? அவர் ‘இந்திரனின்’ பிரசன்னத்தை தனது உபதேசங்களில் பயன்படுத்தினார். அவரின் ஞானம் அடையப்பட்டவிதம் அட்டாங்க, பதஞ்சலி யோக முறைகளுக்கூடாகவே உள்ளது. தியானமும் அகவிசாரமும் ஏற்கனவே இந்த தேசத்தில் உள்ளது தான். அதை புத்தர் கொண்டு வரவில்லை. சில இந்து எதிர்ப்பாளர் கூறுவது போல் புத்தரின் வழிமுறை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கபடவில்லை. இங்கே விற்க்கபட முடியாத பொருள் வேறிடம் கொண்டு செல்லப்பட்டது. அவ்வளவே. புத்தர் ஒரு சிறந்த ஞானி என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. அவரின் கருத்துகள் பலரை சென்றடைய காரணம், இந்து மதம் அப்போது குறைந்தளவு பேச்சு வழக்கில் இருந்த சமஸ்க்ருதத்திலும், அதைக் கற்ற பண்டிதர்கள், பணம் படைத்தவர்களின் கைகளிலேயே பயணப்பட்டது தான். சனாதன தர்மத்தின் முக்கிய கருத்துகளான கர்மவினையும் மறுபிறப்பும், தியானமும் அகப்பயணமும், சன்னியாஸ வாழ்வும், ஜபம் போன்றனவும் புத்தரினால் பாமரர்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது பேச்சுவழக்கிலிருந்த பாலி மொழி அதற்கு உதவியது. இது சமஸ்க்ருதத்தின் கொச்சை வடிவம் (slang) என்பது எனது ஆய்வு. இந்நிலையில், இந்து தர்மம் பழைய வழிகளில் மாற்றம் ஏற்படுத்தி தன்னை சூழலுக்கு இயைபாக்கிக் கொண்டது. அதாவது, புத்தரால் ஏற்பட்ட மாற்றம் இந்து ஞானிகளை சுதாரித்துக் கொள்ள வைத்தது. பரஸ்பர விவாதங்கள் அறிஞ்ஞர்களிலும் கேட்போரிலும் சனாதனதர்மத்தில் ஆழச்செல்லும் தேவைக்கு உதவியது.
ஆக, இந்து மதம் யார் தோளில் ஏறியாவது தனது சாஸ்வதத்தை (eternality) நிறுவிக்கொள்ளும் வலிமையுடையது. மனிதர் மாறிவிடுவர், மாறிய மனிதரில் தன்னை மாற்றிக் கொள்ளும் (transit) இந்து மதம் என்றும் சாகா. நீங்கள் உண்ணும் உணவின் வகையை மாற்றலாம், ஆனால் உண்பதை நிறுத்த முடியாது. அது போல சனாதன தர்மத்தின் சாரம் உடலுக்கப்பால் செல்ல முயல்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத ஓடம் என்பதில் சந்தேகம் இல்லை.
சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடலையும் அதன் வாழ்வையும் இறுதிக் குறிக்கோளாக கொள்ளாத ஒரு மார்க்கம் பொறுப்புடையதல்ல. பல நூறாண்டுகளாக நடைமுறையில் இல்லாத வர்ணாசிரம நடைமுறை சனாதன தர்மத்தின் போதனை அல்ல, மாறாக அது கண்டறிந்த சமூக-மனவியல் நடைமுறை. அந்நடைமுறை இப்போதும் உள்ளது. வர்ணாசிரமத்தை பலர் துஷ்ப்ரயோகம் செய்துள்ள அதே வேளை தவறாகவும் புரிந்து வைத்துள்ளனர்.
பாரிய கட்டடம் ஒன்றினை நிர்மாணிக்கையில் அங்கே பொறியியல் வல்லுனர்கள், மேற்பார்வையாளர், வள வழங்குனர், கூலி வேலையாட்கள் என வகை பிரிந்து கிடப்பதை யார் மறுக்க வல்லோர்? ஏன் இந்த வர்ணாசிரமத்தை இப்படி மாற்றினால் என்ன. கூலியாட்கள் engineer களாலும், மேஸ்த்திரியாலும் அடக்கி ஒடுக்கபட்டு தானே வேலை வாங்கப்படுகிறார்கள். இந்த கூலியாட்களை engineer களாக தரமுயர்த்தி இந்த அநியாயத்தை நிறுத்தினால் என்ன? இப்படிதான்யா அன்றிலிருந்து இன்று வரை தகுதி அடிப்படையில் வேலைகளும் வாழ்க்கைத்தரமும் இருக்கு. ஒரு தொழிலாளி தனது நிலையை அம்பானியாக (the famous Reliance moto, Ambani) அறிவிப்பதன் மூலமே இதனை மாற்றமுடியும். சாகும் வரையில் தொழிலாளியாக இருந்தோ, வேற்றுச் சமயத்துக்கு மாறிக் கொண்டோ, இந்து மதத்தை தூஷித்தோ அல்ல.
அம்பேத்கார் சாதியத்தால் பாதிக்கப்பட்டதற்கு தனிமனித, சமூக மனவியல் அவரால் கவனிக்கபடவில்லை. எனினும், தந்தையுடன் பிணங்கிய மகன் தன் சிற்றப்பனிடம் புகலடைந்தான், தந்தையின் எதிரியிடம் அல்ல. அம்பேத்கார் தன்னை இந்திய மண்ணின் எதிரியாக காட்டிக் கொள்ளவில்லை. தம்பியுடன் உள்ளதால் தந்தைக்கும் வருத்தமில்லை, சிற்றப்பனும் அப்பனைத் தாக்கப் போவதில்லை.
ஆகவே, புத்த மதத்தை பயன்படுத்தி இந்து மார்க்கம் தாக்கப்படுவதில் ஓட்டைகள் நிறைய உண்டு. எதிரிகள் கவனித்து திருத்திக் கொள்ளவும்.
தெளிவடைந்து மேலும் தொடரும்...
1 day ago
No comments:
Post a Comment