Monday, June 15, 2009

மாயைகள் சில

மக்கள் மனதில் உள்ள சில மாயைகள் பற்றி நினைக்கையில் பல இடங்களிலும் ஏற்கனவே ஓரளவு பேசப்பட்ட சில விடயங்களை பகிரலாம் என நினைக்கின்றேன்.

௧. இந்தியாவின் திராவிடர் கொள்கைகளும் இந்து மத (பிராமண) எதிர்ப்பும்

இந்தியாவில் மட்டுமல்லாது சகல இடங்களிலும் சாதி, மத, மொழி, நிற, இனம் போன்ற இன்ன பல விதங்களிலும் வலிமை பெற்ற ஒரு சாரார் மற்றவரை ஆதிக்கத்திற்கு உட்படுத்தியே வந்துள்ளனர். இந்தியாவில் இருந்த மன்னர் ஆட்சியில் சாஸ்திரங்கற்ற பிரிவினராக பெரும்பாலும் அந்தணர்களே இருந்தனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் அவர் வழி வந்தவரை சமூகத்தில் உயர்த்தி வைத்தது. மனித மனத்தின் தன்முனைப்பு எப்பொதும் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி காட்டவே எத்தனிகிறது. இவர்களும் விதிவிலகின்றி தம்மை ஏனைய சமூகங்களிலிற்ருந்து பல விதங்களிலும் வேற்றுமை படுத்தி கொண்டனர். ஆனால் இந்த நிலை பின்னர் வந்த அரசியல் நிகழ்வுகளால் அதிக காலம் நீடிக்கவில்லை. பெரும்பாலான பிராமணர்கள் தம்மை சமூகத்திற்குள் இடை சொருகி கொண்டோ அல்லது முற்றாக ஒதுங்கியோ வாழத்தொடங்கிவிட்டனர்.

மொஹலாயர் ஆட்சியின் போது அவர்கள் மதம், மொழி, கலாச்சாரங்கள் ஆழப்பட்டவர் மேல் திணிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேயர் நம்மை அடக்கியாண்டார்கள். அவர்களின் மதம், கலாச்சாரம் போன்றவையும் உயர்வு தாழ்வை அடியொற்றியே அமைந்தது. உதாரணமாக, இரு மேற்கத்தைய மத, கலாச்சாரங்களும் இந்திய மதங்கள், கலாச்சாரத்தை இழிவு படுத்தியே கத்தி முனையிலோ, காசு/ பதவி வழியிலோ பரப்பப் பட்டது. இதற்கு அவர்களுக்கு காலாவதியான “பிராமண மேலாதிக்கம்” கை கொடுத்தது. இன்னும் கை கொடுக்கிறது. இவ்விரு மதங்களும் தம்மைத் தவிர வேறு மதங்களை அனுமதிக்காத போக்கையே ஆதார அடிப்படையாக கொண்டவை. நிற்க.

தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்கள் தமது கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் சுரண்டித்தின்ற, தின்றுகொண்டிருக்கும் மேற்கத்தைய ஆட்சியை விட ஏழை, அழுக்கு வேட்டி பிராமணர் கூட்டத்தைப் பரம வைரிகளாக்கியது விந்தை! சாதி அடிப்படையில் எங்காவது அரிவாளைத் தூக்கி கீழ்சாதி என வர்ணிக்கப்படுவோரை வெட்டிய பிராமணர் எண்ணிக்கை, சோம நாதர் கோயிலை கொள்ளையடிக்க வந்த முஹமது கோரி வெட்டிக் கொன்ற பிராமணர் எண்ணிக்கையை விட அதிகமோ? சாதி வெறியை எதிர்ப்பது தான் இந்த (இல்லாத) திராவிட கட்சிகளுக்கு ஒரே வெறி என்றால், இங்கு ஒரு கட்சி தான் இருக்க வேண்டும். ஆனால், சாதிக்கொரு கட்சி, ஆளுக்கொரு கட்சி தொடங்கி தமக்குள் மோதிக்கொள்வதில் பிச்சைக்கார பிராமணர் எங்கே வந்தார்கள்? தமிழ் நாடு எத்தனை முறை, எத்தனை காலத்துக்கு பிராமணக் கட்சியின் ஆட்சியில் இருந்தது? 700 வருட முஸ்லிம் ஆட்சியும், அதன் பின்னரான க்றிஸ்த்தவ ஆட்சியும் இந்துப் பிராமணர்களை உயர் சாதியினராக கெளரவித்ததா? இத்தனை காலம் ஆட்சியிலிருந்த திராவிடக் கட்சிகள் சாதி முறையை ஒழித்துவிட்டனவா? ஒவ்வொரு சாதி அமைப்பும் கொம்பு சீவி விடப்பட்டு, அதன் மூலம் அரசியல் நடத்தப் பயன்படுகின்றனவே தவிர வேறு நன்மைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

இப்போதுள்ள திராவிடக் கட்சி எந்த விதமான அராஜக அடக்கு முறைகளையும் தம்மை சாராதவரில் பிரயோகிக்கவில்லையா? ஊழல் எதுவும் இவர்கள் செய்யவில்லையா? "ஆதாரம் இருக்காடா?” என்ற கர கர பேச்சுகளால் பாமரர்கள் உணர்ச்சியூட்டப்படலாம். இந்திய தமிழ் சினிமாவிலும், டீ. வி நாடகங்களிலும் புத்தியை தொலைத்து விட்ட சாதாரணர்களை எப்போதும் இயற்கை தேர்வு செய்வதில்லை. அவ்ர்கள் மெதுவாக உலர்ந்து போய் விடுவார்கள். ஆக, இந்த வகை வியாபாரிகளுக்கு துன்பமும், அடக்கு முறையும் நீடிக்க வேண்டும். இந்த ஓநாய்கள் கண்ணீர் விட ஆடுகள் நனைய வேண்டும், என்றோ நின்று விட்ட மழையை திட்டவும் வேண்டும்.

சரி, இவர்களின் பகுத்தறிவு எல்லா மதத்திற்க்கும் எதிரானதா அல்லது இந்து மதத்திற்கு மாத்திரம் எதிரானதா? இவர்களுக்கும் வத்திக்கானுக்கும், எண்ணை விற்கும் பணத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் உள்ளது போல் தெரிகிறதே.

திராவிடத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு இருந்தால், தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் தொடர்பு இல்லையா? தமிழ் வாழ்ந்தது நேற்று முளைத்த இந்தப் “பகுத்தறிவு”ப் பதர்களால் அல்ல, அது காலங் காலமாய் சைவ, வைணவ மூதறிஞ்ஞர்களால் வளர்க்கப்படுகிறது. அவர்களை விட இந்த அற்பர்கள் எதை சாதித்தார்கள்?

தொடரும் ...

No comments:

Post a Comment

 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .