Sunday, June 21, 2009

நாஸ்திகம்

டவுள் ஏற்பும், கடவுள் மறுப்பும் குறைந்த வயது கொண்டவை அல்ல. எனினும், கடவுளை ஏற்ற கூட்டம் பின்னையதை விட அதிக எண்ணிக்கையில் தான் எப்போதும் உள்ளது. பெரும்பாலும் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. வாழ்வின் அவலமே அந்த இருவருக்கும் ஒரு பொருளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.

நாம் இந்தியாவில் (குறிப்பாக தமிழ் நாட்டில்) காணும் நாஸ்திக குரல்கள் Bertrand Russell உடையதைப் போன்று உறுதியாக தெரியவில்லை. ரஸ்ஸல் ஒரு பெரிய மனோதத்துவ மேதை. அவர் தனது வழ்வில் மனித மனம் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதின் பின்னர் கடவுள் கொள்கையை சாடினார். ஆனபோதிலும், அவர் முழு நேரமாக கடவுள் தத்துவத்தை தூஷித்து கொண்டிருந்தாரில்லை. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதே அவரின் வாதம்.

புத்தரும் கடவுள் எனும் பொருளைக் கவனிக்க வேண்டியதில்லை என்றே உபதேசித்தார். நவீன விஞ்ஞானத்தின் தந்தை Albert Einstein தனது கடைசி கால ஆராய்ச்சிகளுக்கு ‘ஏதோ ஒரு அப்பாற் பட்ட’ சக்தியை துணைக்கிழுத்துள்ளார். பகவத் கீதையை இள வயதிலேயே படித்திருக்க வேண்டும் எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளது சமயோசிதமாக நாஸ்திகர்களால் மறக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ, வேறு எதுவோ, ஒன்றை மறுப்பதால் அறியப்படுவதில்லை. உண்டு எனும் நிலை பயணப்பட வைக்கிறது. இல்லை என்பவன் தனது அறிவின் கதவை அழுத்தி மூடி விடுகிறான். கோபுரத்தைத் திருடுபவர்கள் அதை ஒளித்து வைக்கவும் தெரிந்திருக்க வேணும் என ஒரு முதுமொழி உண்டு. திருடிய கோபுரத்தை எங்கே ஒழித்து வைக்க போகிறார்கள்? கோபுரம் இருந்த இடத்தில் எதை வைக்க போகிறார்கள்? நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கத்தை இதற்கு முன் வந்த அதி உன்னத தத்துவ மேதைகளே அகற்ற முடியவில்லை, அஞ்சாம் வகுப்பு அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களுமா அழிக்கப் போகிறார்கள்?
மேடை போட்டு ‘இல்லாத’ கடவுளைத் திட்டும் நாஸ்த்திக வாதம் மனப் பிறழ்ச்சியே தவிர வேறில்லை. இவர்கள் ஏதாவது ஒரு துறையில் தீவிர ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளா? அரிஸ்டோட்ல், பிளேட்டோ, கன்பூஷியஸ் போன்ற மேதைகளா? ஹெகல், ரஸ்ஸல் போன்ற தத்துவ விற்பன்னர்களா? பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரும் வர்த்தகர்களா?
இது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்று சொல்ல முடியாவிட்டால் இவர்கள் குறை கூறும் வேலை வெட்டி இல்லாத ‘சாமி’ யார்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? இவர்களும் வெத்து வேட்டு வீராச்சாமிகள் தாம்.
எதோ சொல்லிபுட்டேங்க, கேள்வி அல்லது திருத்தம் இருந்தா பதில் சொல்லுவேனுங்க.
நன்றிங்க.

Friday, June 19, 2009

ஆஸ்திகம் எது?

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் எப்போதும் எதையாவது சார்ந்தே உள்ளான். மனித மனத்துக்கு தனிமை பயங்கரமாகவே உள்ளது. கண்ணுக்கு தெரியும் அச்சுறுத்தல்கள் மட்டும் அல்ல, பார்வை வீச்சுக்கு அப்பாற்பட்ட அமானுட ஆபத்துகளையும் விலக்க ஒரு பாதுகாப்பை நாடும் இயல்பு பெரும்பாலான மனிதர்களிடம் உள்ளது. இதற்கு நலிவுறாத ஒரு வலிமை வேண்டும்.

உண்மையில் ஆன்ம விசாரம் இவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஒரு விளையாட்டரங்கின் அருகே வசிப்பதாலோ, விளையாட்டுச் செய்திகளை படிப்பதாலோ, ஒரு விளையாட்டு வீரருடன் சினேகிதித்துக் கொள்வதாலோ நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் ஆக மாட்டீர்கள் என்பது எத்தனை யதார்த்தமோ அதை விட அதிக சிரமமானது ஆன்ம நிலையை உணர்வது. கோயில்களிலோ, ஆஸ்ரமங்களிலோ வெறுமனே வாய் வலிக்க பஜனை பாடுவதால் உங்கள் கர்வம் தவறான முறையில் ஊட்டங்கண்டு விடும். அப்படிப் பட்டவர்களை நாம் சந்தித்துள்ளோம். பரிதாபமாக, அவர்கள் தேங்கிவிட்ட நீராகிப் போவர். இதிலிருந்து மீள ஒரு தூண்டல் வேண்டும்.
நாம் இன்பத்தையடைய செய்யும் முயற்சிகளில் காற்பங்கு கூட துன்பத்திலிருந்து வெளியேறுவதற்கு செலவளிப்பதில்லை. படிப்பு, வேலை, திருமணம் என எதை எடுத்தாலும் கடவுளை வேண்டும் அதே சமயம் அக்காரியங்களில் இயன்ற முயற்சி எடுக்கும் நாம், துன்பப்படும் போது முற்று முழுதாக கடவுள் பார்ப்பான் என்று முயலாது இருப்பது அறிவுடைமை அல்ல. நன்றாக படிக்கும் ஒருவர் இறைவனை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் நல்ல பெறுபேறு அடைவது உறுதி. இதற்கு மறுதலை எதிர் விளைவையே தரும். சரி, அப்படியானால் ஏன் கடவுள்?
துக்கம் கூட வெட்கம் அறியாது. துன்பத்தில் நீங்கள் நீங்களாக இருப்பது கடினம். உடற்தொழிலியல், மனம் என சர்வமும் ‘அடி’பட்டு விடும் நிலையில் நம்மை நாம் காண ஒரு மூன்றாம் இடம் நமக்கு தேவை. அதை இறை வழிபாடுகள் நிகழ்த்துகின்றன. மனம் பேதலித்த துயரத்திலும் ஒருவரால் மனம் ஒருமிக்க முடியுமானால் அது மனதின் வளர்ச்சிக்கு, உயர்வுக்கு வழிகோலும். முடிவில், துன்பத்தில் இருந்து மீள்பவர்கள் முன்னிருந்ததை விட அதிக உறுதியுடன் எழுவது திண்ணம். அவர்களால் அதிக வலிமை கொண்டு போரிட முடியும். வென்றவன்? அவனுக்கும் வெற்றியினால் நிதானம் இழக்காத நிலை இறைவழியால் அணுகப்படுகிறது. இதற்கும் ஒரு ஆற்றல் வேண்டும்.
கோயிற் திருவிழாக்களில், பாமரத்தனமான வேண்டுதலில் தான் ஆஸ்திகரும், நாஸ்திகரும் கடவுளைக் காண்கிறார்கள். அதனால் தமது கொள்கையில் தோற்கிறார்கள். இன்று, CEOக்கள், மேலாண்மையாளர்கள், தொழினுட்பவியலாளர்கள் போன்ற(மூளை) வேலைப்பளு கூடியவர்களுக்கு அவர்களின் stress relief ஆக கம்பியூட்டர் கேம்ஸ், செக்ஸ் உறவுகள், வெளிக்கள விளையாட்டுகள் என பரிந்துரைக்கப் படுகிறது. கூலி வேலை செய்வோர் சாராயக் கடையை அல்லது சினிமா தியேட்டரை நாடுகின்றனர். அது போல, அன்றைய காலங்களில் கோயில் திருவிழாக்கள் ஏற்படுத்தப் பட்டவை என கூறுகிறார்கள். இதில் உள்ள முறைகேடுகள் சமயம் சார்ந்தவை அல்ல, மாறாக அது சமூக மனம், சூழல் தொடர்பு பட்டது. அதை பின்னர் பார்போம்.

என்வே, ஆன்ம வழி செல்வோர் இந்தப் புறக்களியாட்டங்களில் தொடர்ந்து நிலை பெறாமல் அகப் பயணத்திற்கான முறைகளைப் பயில வேண்டும். ஒருவரின் வழி இன்னொருவருக்குப் பொருந்தா. எனவே பொருத்தமானதை வழிகாட்டிகளை அடைந்தோ, ஒவ்வொரு வழியாக முயன்றோ கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு குரு வேண்டும்.
கோயில்களிலும், மடாலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும் அவ்வழிகளை அடைய முடியாதவ்ர்களும், ஆன்மீகத்துக்கு தயார் இல்லாதவர்களும் பல சமயங்களில் துஷ்ட செய்கைகளில் ஈடுபடுவதையும், தவறான முன்னுதாரணமாக விளங்குவதையும் காணலாம். இவர்களை இறைக் கொள்கையுடன் பொருத்த தேவை இல்லை. உங்கள் வாகனச் சக்கரத்தில் அழுக்குப் பட்டால் வாகனத்தை எரிப்பீர்களா? அது போல், இந்த கயவர்களை விலக்கி விடுங்கள் அல்லது விலகி விடுங்கள்.
ஏன் ஆன்மீக முறைகள் தேவை? அதை அடையாதிருப்பதால் என்ன கேடு?
இயற்கையில் ஒவ்வொரு கூறும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது ஒரு நிலைபேறடையும் வரையில் இது தொடர்கிறது, அடைந்த பின் மீண்டும் (வேறு நிலைக்குத்) தொடர்கிறது. சிறு மாற்றங்கள் பெரு விளைவுகளாக தோற்றம் பெறுகின்றன. ஒரு சிறு கல் கல்லாகவே இருப்பதில்லை, அது மண்ணாகவோ அதை விட நுண் துகளாகவோ மாறிக்கொண்டிருக்கிறது. துகள்கள் மலையாகவும் மாறும். ஒரு buffer condition யை அடையும் வரையில் அத்தனை பொருட்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. இது மனிதருக்கும் பொருந்தும்.
இம்மாற்றங்கள் புறத்தொடர்பிலான உறவு மாற்றமல்ல. ஏழை பணக்காரனாதலும், பணக்காரன் ஏழையாதலும், அழகன், குரூபி, படிப்பு போன்றவற்றுக்கு ஞானிகளும், முன் பயணித்தவர்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீங்களும் அணுத்துகள்களால் ஆனவர்கள். அணுதவிர்ந்த அதி நுண்துகள்களும் அறியப்பட்டுள்ளன. அறியப்படாத பொருட்களும் இருப்பதற்கு இன்னும் சாத்தியம் உண்டு. அணுக்களால் ஆக்கப்பட்ட உடலே ’நாம்’ என்பவர்கள் இத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
மூலகங்களாலும் அவற்றின் அணுக்ககளாலும் நமது உடல் கருப்பையில் ஆக்கப் பட்டபின் வெளியேறி காலங்கள் கடந்து முதுமை அடைந்து மரணிக்கிறது. இரும்புக்கு பாதுகாப்பு கவசங்கள் இடாத பட்சத்தில் அது துருவடைந்து வெறு சேர்வைகளாகி விடுவது உண்மை. உடலையும் எந்த பராமரிப்பும் இல்லாது விடும் போது அதன் இயல்பில் மரணத்தை நெருங்கி விடும். அதற்காக கண்டறியப்பட்ட முறைகளே இந்திய இறை வழிபாடுகள்.
மரணத்தை வெல்லல் அல்லது தள்ளிப்போடுதல் என்பதன் பொருள் மரணத்தில் அச்சம் அல்ல. ஒரு பொறியியலாளர் 55 வயதை நெருங்கி விட்டர் ஆனாலும் அவரின் குழந்தைகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. அவர் இன்னும் 10 வருடம் வேலை செய்து சம்பாதிக்க விரும்புவார் தானே? அது போல், பல வித்தைகளுக்கும் அவை அறியப்பட்ட அதிக ஆயுள் அவசியம். அதற்காகவே இந்திய யோகிகள் உடல் பேணும் முறைகளை போதித்தார்கள். ஆன்ம நாட்டம் உடையவர்கள் உடல் பேணுதல் நன்று.
சடப்பொருட்களில் அணுக்களுடன் மின்காந்தப் புலம் போன்றவையும் ஒளிக்கதிர்களும் தங்கியுள்ளன. இவ்வலைகள் இச்சடபொருட்களில் புதிதாக சேர்ந்தோ அல்லது விட்டு விலகியோ செல்லக்கூடியன. இது சடப்பொருட்களின் மின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப நிகழும். மின் காந்த அலை மாறுதலுக்கு இரசாயன, பெளதீக மாற்றங்கள் காரணமாகும்.
இது போல, யோகிகள் மனிதர்களின் சக்தி விளையாட்டினை மெருகூட்டிச் சென்றார்கள். பாரத கண்டத்தில் பல இடங்களிலும், பலராலும், பல விதமான முறைகள் பின் பற்றப்பட்டு, பின்னர் அவற்றிக்கிடையான ஒற்றுமைகள் அறியபடுமிடத்து அவை ஒரு சேர ஹிந்து மதமாக அறியப்பட்டது. இதற்கும் ஆதி வரலாற்றுக்கும், இந்திய நாகரிகத்துக்கும் தொடர்பு காணல் நேர விரயம்.

எந்த முறையில் உடலில் இரசாயன (chemical), பெளதீக (physical), பொறி (mechanical) மாற்றங்களை மேற்கொண்டால் பிரபஞ்ச சக்திகளை அதிகம் தாங்கிக் கொள்ளலாம் என்பதின் இரகசியமே உண்மை ஆன்மீகத்தின் தேடு பொருள்.
சரி இந்த சக்தியை கொண்டு என்ன செய்வது? சேர்த்து பாருங்கள், தெரியும். நீங்கள் ‘அந்த’ உலகத்தில் பிசி ஆகி விடுவீர்கள்.
அறிந்து தேடுவோம்...

Thursday, June 18, 2009

தெளிவடைவோம், தயவுசெய்து

வடக்கிலுள்ள சில இந்து அமைப்புகள் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான இந்து சமயியிகளுக்கு தமது சமயம், பண்பாடு பற்றிய எதுவிதமான அறிவும் இல்லையோ எனும் சந்தேகத்தின் அனுமானத்தில் சில விடயங்களை முன் வைக்கிறேன். தெரிந்தவர்கள் எனது முயற்சியை செதுக்கித் தாருங்கள்.

புத்தரோ அவரின் போதனைகளோ இந்துக்களுக்கு புதிதல்ல. புத்தரும் இந்து வேதங்களை அடிக்கடி உசாத்துணைப் படுத்தியுள்ளார். அவரின் கொள்கைகள் மறு பிறப்பை நம்புகின்றது. இது இந்துக்களுக்கு ஒரு புதிய விடயமா? அவர் ‘இந்திரனின்’ பிரசன்னத்தை தனது உபதேசங்களில் பயன்படுத்தினார். அவரின் ஞானம் அடையப்பட்டவிதம் அட்டாங்க, பதஞ்சலி யோக முறைகளுக்கூடாகவே உள்ளது. தியானமும் அகவிசாரமும் ஏற்கனவே இந்த தேசத்தில் உள்ளது தான். அதை புத்தர் கொண்டு வரவில்லை. சில இந்து எதிர்ப்பாளர் கூறுவது போல் புத்தரின் வழிமுறை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கபடவில்லை. இங்கே விற்க்கபட முடியாத பொருள் வேறிடம் கொண்டு செல்லப்பட்டது. அவ்வளவே. புத்தர் ஒரு சிறந்த ஞானி என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை. அவரின் கருத்துகள் பலரை சென்றடைய காரணம், இந்து மதம் அப்போது குறைந்தளவு பேச்சு வழக்கில் இருந்த சமஸ்க்ருதத்திலும், அதைக் கற்ற பண்டிதர்கள், பணம் படைத்தவர்களின் கைகளிலேயே பயணப்பட்டது தான். சனாதன தர்மத்தின் முக்கிய கருத்துகளான கர்மவினையும் மறுபிறப்பும், தியானமும் அகப்பயணமும், சன்னியாஸ வாழ்வும், ஜபம் போன்றனவும் புத்தரினால் பாமரர்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது பேச்சுவழக்கிலிருந்த பாலி மொழி அதற்கு உதவியது. இது சமஸ்க்ருதத்தின் கொச்சை வடிவம் (slang) என்பது எனது ஆய்வு. இந்நிலையில், இந்து தர்மம் பழைய வழிகளில் மாற்றம் ஏற்படுத்தி தன்னை சூழலுக்கு இயைபாக்கிக் கொண்டது. அதாவது, புத்தரால் ஏற்பட்ட மாற்றம் இந்து ஞானிகளை சுதாரித்துக் கொள்ள வைத்தது. பரஸ்பர விவாதங்கள் அறிஞ்ஞர்களிலும் கேட்போரிலும் சனாதனதர்மத்தில் ஆழச்செல்லும் தேவைக்கு உதவியது.

ஆக, இந்து மதம் யார் தோளில் ஏறியாவது தனது சாஸ்வதத்தை (eternality) நிறுவிக்கொள்ளும் வலிமையுடையது. மனிதர் மாறிவிடுவர், மாறிய மனிதரில் தன்னை மாற்றிக் கொள்ளும் (transit) இந்து மதம் என்றும் சாகா. நீங்கள் உண்ணும் உணவின் வகையை மாற்றலாம், ஆனால் உண்பதை நிறுத்த முடியாது. அது போல சனாதன தர்மத்தின் சாரம் உடலுக்கப்பால் செல்ல முயல்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத ஓடம் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூகத்தின் சீர்கேடுகளுக்கு உடலையும் அதன் வாழ்வையும் இறுதிக் குறிக்கோளாக கொள்ளாத ஒரு மார்க்கம் பொறுப்புடையதல்ல. பல நூறாண்டுகளாக நடைமுறையில் இல்லாத வர்ணாசிரம நடைமுறை சனாதன தர்மத்தின் போதனை அல்ல, மாறாக அது கண்டறிந்த சமூக-மனவியல் நடைமுறை. அந்நடைமுறை இப்போதும் உள்ளது. வர்ணாசிரமத்தை பலர் துஷ்ப்ரயோகம் செய்துள்ள அதே வேளை தவறாகவும் புரிந்து வைத்துள்ளனர்.

பாரிய கட்டடம் ஒன்றினை நிர்மாணிக்கையில் அங்கே பொறியியல் வல்லுனர்கள், மேற்பார்வையாளர், வள வழங்குனர், கூலி வேலையாட்கள் என வகை பிரிந்து கிடப்பதை யார் மறுக்க வல்லோர்? ஏன் இந்த வர்ணாசிரமத்தை இப்படி மாற்றினால் என்ன. கூலியாட்கள் engineer களாலும், மேஸ்த்திரியாலும் அடக்கி ஒடுக்கபட்டு தானே வேலை வாங்கப்படுகிறார்கள். இந்த கூலியாட்களை engineer களாக தரமுயர்த்தி இந்த அநியாயத்தை நிறுத்தினால் என்ன? இப்படிதான்யா அன்றிலிருந்து இன்று வரை தகுதி அடிப்படையில் வேலைகளும் வாழ்க்கைத்தரமும் இருக்கு. ஒரு தொழிலாளி தனது நிலையை அம்பானியாக (the famous Reliance moto, Ambani) அறிவிப்பதன் மூலமே இதனை மாற்றமுடியும். சாகும் வரையில் தொழிலாளியாக இருந்தோ, வேற்றுச் சமயத்துக்கு மாறிக் கொண்டோ, இந்து மதத்தை தூஷித்தோ அல்ல.

அம்பேத்கார் சாதியத்தால் பாதிக்கப்பட்டதற்கு தனிமனித, சமூக மனவியல் அவரால் கவனிக்கபடவில்லை. எனினும், தந்தையுடன் பிணங்கிய மகன் தன் சிற்றப்பனிடம் புகலடைந்தான், தந்தையின் எதிரியிடம் அல்ல. அம்பேத்கார் தன்னை இந்திய மண்ணின் எதிரியாக காட்டிக் கொள்ளவில்லை. தம்பியுடன் உள்ளதால் தந்தைக்கும் வருத்தமில்லை, சிற்றப்பனும் அப்பனைத் தாக்கப் போவதில்லை.

ஆகவே, புத்த மதத்தை பயன்படுத்தி இந்து மார்க்கம் தாக்கப்படுவதில் ஓட்டைகள் நிறைய உண்டு. எதிரிகள் கவனித்து திருத்திக் கொள்ளவும்.

தெளிவடைந்து மேலும் தொடரும்...

Wednesday, June 17, 2009

மாயைகள் சில (தொடர்ச்சி) - 2

திராவிடத்திற்கும் தமிழுக்கும் அப்படி உறவு இருக்குமானால், அதை விட அதிக நெருக்கத்தை சைவ, வைணவ மதங்களுக்கும் தமிழுக்கும் இடையே காணலாமே? இந்த இந்து-எதிர்ப்பு திராவிட கொள்கைப் புலிகள் வசவு கட்டுரைகளையும், கவிதைகளையும் தவிர வேறு ‘தொண்டு’ எதையும் தமிழுக்கு ஆற்றவில்லை. தமிழரும் இவர்களால் நன்மையடையவில்லை.

க. பஞ்சாங்கம் என்பவருடைய கட்டுரை நூல் ஒன்றிலே பாரதிக்கும் இந்துத்துவா அமைப்பு மற்றும் ஆர். எஸ். எஸ். க்கும் தொடர்புள்ளதான தொனி திரிக்கப்பட்டது தெளிவாகியது. பாரதியார் போன்ற பொது ஆளுமைகளுக்கூடாகவும் இந்திய மதம் மக்கள் மனதில் பரவி விடுமோ எனும் அச்சம் தெரிந்தது.

இந்தியாவிற்குள் ஊடுருவி இந்திய சித்தாந்தங்களை உடைக்கும் நோக்குள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக பல வழிகளிலும் முயல்கின்ற்னர். (இதில் சூக்கும உலகினரின் பின்னணியை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் பகிரும் எண்ணமும் உள்ளது). இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் எவரும் கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தை அடைந்தது போல் எதுவும் தெரியாமல் வரவில்லை. இங்கு வந்த வியாபாரிகள் ஒற்றர்களாக அவர்களுக்கு போதுமான தகவல்களை வழங்கிய பின்பே படையெடுத்தனர்.

ஆபிரிக்க, தென்னமரிக்க, ஆஸ்த்த்ரேலிய மக்கள் இவர்களின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்தது போல் இந்தியா சுலபமாக இருக்கவில்லை. இந்து மதம் இவர்களின் பரம வைரியாக மாறிற்று. மேற்கத்தைய மதங்கள், திராவிட இந்து எதிர்ப்புக் கட்சிகள், அவற்றின் நயவஞ்சக நடவடிக்கைகளை தமிழர் புரிந்து கொண்டு இவர்களை விலக்க வேண்டும். இந்திய சித்தாந்தங்கள், பண்பாட்டைப் போற்றும் ஆட்சி அமைய ஒன்றிணையுங்கள்.


 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .