Thursday, March 11, 2010

புதிய நீதி _- சில உளறல்கள்

பல காலம் பனி பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்கு வெம்மை மறந்து போய் விடுவது உண்மை. எல்லா வகை அதி நிலை மாற்றங்களுக்கும் அதில் இயல்பு கண்டவர்களுக்கும் இது பொருந்தும்.

உலகத்தின் மாற்றங்கள் பெரும்பான்மையை ஒத்து இசைந்தே அனுபவிக்க படுகின்றன. இந்த மாற்றங்கள் சேதத்தை ஏற்படுத்தும் எனினும் கூட ஒரு சிலரால் எதிர்க்க முடியாதன. தன்னின சேர்க்கை ஒரு புதிய இயல்பு இல்லை என்ற போதிலும், அது பல உயிரினங்களிலும் பல்லாயிரம் வருடங்களாக அரிதாகவோ மறைவாகவோ காண பட்டது எனும் அளவிலும் இன்றைய உலகில் அவ்வியல்பின் விஹிதம் மிகையானது கண்கூடு. இதனை ஆரோக்கியமான அவசியமான மாற்றமாக கருதுபவர்களை எதிர்க்க முடியாது. ஏன் இப்படியான அசாதாரண நிலை உண்டாகியது எனும் ஆராய்ச்சியை விட ஏன் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது எனும் எதிர் விவாதமே மேலோங்கியுள்ளது.

விஞ்ஞானம் எத்துணை தூரம் அவசியம் என்றும் அதற்கொரு எல்லை வகுப்பதையிட்டும எவரும் அலட்டி கொள்ளவில்லை. சமூகத்துக்கு அது அவசியமா இது அவசியமா என்றெல்லாம் தர்க்கிப்பவர்கள் இதனை முழு சுதந்திரத்துடன் அனுமத்தித்தால் ஏற்பட்ட விழைவுகளில் முன் சொன்னது ஒன்று.

ஒவ்வொரு முறையும் விண்வெளிக்கு ஒரு ஓடம் ஒசோனை பல சதுர கிலோ மீற்றர்கள் அழித்து கொண்டு செல்லும் போது ஒரு ஏழை நாடு மரம் நட வேண்டும் என்பது பெரும்பன்மயினதும் விஞ்ஞாவிசிறிகளினதும் வாதம்.

எண்ணிக்கை தெரியாதளவு விலங்குகள் விஞ்ஞா கூடங்களில் பரிசோதனைக்காக வதை படுவது மனித முன்னேற்றத்துக்காக. அவற்றின் அவலமும் வலிகளும் யாரால் பொறுப்பேற்க பட போகின்றன ?

இயற்கை தேர்வை சிலாகித்த விஞ்ஞா மேதைகள் அதற்கு ஒரு சந்தர்ப்பமும் வழங்க கூடாது எனும் பிடிவாதத்துடன் வலிமையற்ற மனிதர்களை எண்ணிக்கையில் அதிகபடுத்தி விட்டார்கள். இதில் ஏழைகள் சேர்த்தி இல்லை. அவர்களின் வலிமை இயற்கையால் பேணப்படுகிறது. ஆம் நோய்களும் அனர்த்தங்களும் இயற்கை தேர்வு தான்.

உணவுக்கு செலவழிக்கபடும் நேரமும் பணமும் எவருக்கும் இங்கு அநாகரிகமாக தென்படவில்லை. ஒரு கையளவு உணவை ஒரு பன்னாட்டு நிறுவனம் பல மணி நேரம் செலவழித்து உடலுக்கு ஒவ்வாத கூறுகளை கொண்டு தயாரித்து தரும் போது அதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து விட்டு வரும் எவருக்கும் எத்தனையோ மனிதர்கள் காய்ந்த ரொட்டி துண்டு கூட இல்லாது சிரமப் படுவது நினைவுக்கு வருவது இல்லை. இது இயற்கை செய்த சூழ்ச்சி இல்லை. உங்கள் வீட்டில் ஒருவரே அதிகம் உண்டால் மற்றவர்களை அது எவ்வாறு பாதிக்குமோ அதே விளைவு இங்கும் செல்லுபடியாகும். உடை, வாகனம் என்று எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

உடை நாகரீகம் என்ற பெயரில் ஆறாக ஊற்றப்படும் பணத்துக்கும் நேரத்துக்கும் எந்த வகை நியாயம் கற்பிக்கலாம் என்று யோசிக்கிறேன். மூன்றாம் மண்டல நாடுகளில் வாகன புகை, எரிபொருள் சிக்கனம் எல்லாம் பேசும் நபர்கள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ள ஆலை கழிவுகளையோ விளையாட்டு என்ற பெயரில் நடக்கும் கார் பந்தயங்களையோ "கவனிக்க" விரும்புவதில்லை.

இப்படி சொன்னதும் சொல்லாததுமான பல மாற்றங்கள் மனிதர்களுக்கு நீதியானதாக தெரியும் நிலை எந்த அடிப்படையில் உருவாகியது? எப்போது மனிதர்கள் இயந்திரங்களுக்கும் அவற்றினால் தேடப்படும் புலன் சுகத்திலிருந்தும்
தம்மை சுதந்தரித்து கொள்ள போகிறார்கள்?

No comments:

Post a Comment

 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .