Sunday, June 21, 2009

நாஸ்திகம்

டவுள் ஏற்பும், கடவுள் மறுப்பும் குறைந்த வயது கொண்டவை அல்ல. எனினும், கடவுளை ஏற்ற கூட்டம் பின்னையதை விட அதிக எண்ணிக்கையில் தான் எப்போதும் உள்ளது. பெரும்பாலும் இருவருக்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. வாழ்வின் அவலமே அந்த இருவருக்கும் ஒரு பொருளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளது.

நாம் இந்தியாவில் (குறிப்பாக தமிழ் நாட்டில்) காணும் நாஸ்திக குரல்கள் Bertrand Russell உடையதைப் போன்று உறுதியாக தெரியவில்லை. ரஸ்ஸல் ஒரு பெரிய மனோதத்துவ மேதை. அவர் தனது வழ்வில் மனித மனம் தொடர்பில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டதின் பின்னர் கடவுள் கொள்கையை சாடினார். ஆனபோதிலும், அவர் முழு நேரமாக கடவுள் தத்துவத்தை தூஷித்து கொண்டிருந்தாரில்லை. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதே அவரின் வாதம்.

புத்தரும் கடவுள் எனும் பொருளைக் கவனிக்க வேண்டியதில்லை என்றே உபதேசித்தார். நவீன விஞ்ஞானத்தின் தந்தை Albert Einstein தனது கடைசி கால ஆராய்ச்சிகளுக்கு ‘ஏதோ ஒரு அப்பாற் பட்ட’ சக்தியை துணைக்கிழுத்துள்ளார். பகவத் கீதையை இள வயதிலேயே படித்திருக்க வேண்டும் எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளது சமயோசிதமாக நாஸ்திகர்களால் மறக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானமோ, மெய்ஞ்ஞானமோ, வேறு எதுவோ, ஒன்றை மறுப்பதால் அறியப்படுவதில்லை. உண்டு எனும் நிலை பயணப்பட வைக்கிறது. இல்லை என்பவன் தனது அறிவின் கதவை அழுத்தி மூடி விடுகிறான். கோபுரத்தைத் திருடுபவர்கள் அதை ஒளித்து வைக்கவும் தெரிந்திருக்க வேணும் என ஒரு முதுமொழி உண்டு. திருடிய கோபுரத்தை எங்கே ஒழித்து வைக்க போகிறார்கள்? கோபுரம் இருந்த இடத்தில் எதை வைக்க போகிறார்கள்? நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வழக்கத்தை இதற்கு முன் வந்த அதி உன்னத தத்துவ மேதைகளே அகற்ற முடியவில்லை, அஞ்சாம் வகுப்பு அரசியல் வாதிகளும் சினிமா நடிகர்களுமா அழிக்கப் போகிறார்கள்?
மேடை போட்டு ‘இல்லாத’ கடவுளைத் திட்டும் நாஸ்த்திக வாதம் மனப் பிறழ்ச்சியே தவிர வேறில்லை. இவர்கள் ஏதாவது ஒரு துறையில் தீவிர ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளா? அரிஸ்டோட்ல், பிளேட்டோ, கன்பூஷியஸ் போன்ற மேதைகளா? ஹெகல், ரஸ்ஸல் போன்ற தத்துவ விற்பன்னர்களா? பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெரும் வர்த்தகர்களா?
இது போன்ற கேள்விகளுக்கு ஆம் என்று சொல்ல முடியாவிட்டால் இவர்கள் குறை கூறும் வேலை வெட்டி இல்லாத ‘சாமி’ யார்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? இவர்களும் வெத்து வேட்டு வீராச்சாமிகள் தாம்.
எதோ சொல்லிபுட்டேங்க, கேள்வி அல்லது திருத்தம் இருந்தா பதில் சொல்லுவேனுங்க.
நன்றிங்க.

2 comments:

  1. மிகவும் தெளிவான பார்வை. சரியான சாட்டையடியும் கூட! தொடர்ந்து எழுதுங்கள்.

    http://ithuvum.blogspot.com/2010/01/blog-post.html

    ReplyDelete

 
mba-online-program.com
Counter provided by mba-online-program.com .