எனக்கு ஆயாசம் கொள்ள வைக்கும் மனித இயல்பு ஹிப்பக்ரஸி
(Hypocrisy) தான். பெரும்பாலும் எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் தமது ஈகோவை ஒரு கொள்கையுடனோ, மொழியுடனோ, ஒரு மனிதனிடமோ இறுக்கமாக பொருத்தி வைத்துள்ளனர். மதரீதியிலான கண்ணோட்டமும் சரி ஒரு பிரபல்யத்துடன் பிணைத்து வைத்திருப்பதும் சரி தெளிவான நடு நிலைப் பார்வையில் அமைவது அரிது.
நேற்று ஒரு நண்பன் கமல்ஹசனைப் பற்றி ஆஹா ஓஹோ என புழுகி தள்ளினான். ஒரு விசிறியாக அவன் அப்படி பேசுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவனின் பார்வை அந்த நடிகரை ஒரு சர்வதேசமட்டத்தில் வைத்து பார்க்கவும் ஈடு இணையற்ற நிலைக்கு கொண்டு செல்லவும் முயன்ற போது எனக்கு பொறுமை காக்க முடியவில்லை. நான் சொன்னேன், கமலை விட நடிப்பில் சிற்ந்தவர்களை நான் வேறு படங்களில் கண்டுவிட்டேன், மேலும் கமல் தன்னை தன் படங்களில் மிகைப்படுத்த தொடங்கிய காலத்திலெயே ஒரு நடிகனாக தன்னை இழந்து விட்டார் என்று. பரமகுடி ”நாலும் தெரிந்த” நாயகனாக காட்டவே பெரும் பிரயத்தனப் படுகிறார் என்றும் விளக்கினேன். உடனே அவன் ஒரு தமிழன் நாலு புதிய விஷயம் செய்யப் போனால் உடனே குறை கண்டு பிடிக்க ஆட் சேர்த்து விடுவீங்களெ என்றான். உள்ளே அதிர்ந்து பின் சுதாரித்து கொண்டு பல திரைப்படங்களையும் உலக சினிமாவையும் மேற்கோள் காட்டினேன். அவன் “எனக்கு அதெல்லாம் தெரியாது, ஆனா கமல் தான் பெஸ்ட், அவரின் நடிப்பில் தவறு இல்லை” என்றான். சினிமா விமர்சனங்களையாவது தொடர்ந்து படிக்கிறியா என கேட்டதுக்கும் இல்லை என்றான். தான் கமல் படம் மட்டும் தான் பார்ப்பேன் என்றவனிடம் எனக்கு முதல் முறையாக ஒன்று உறைத்தது. இங்கு கமல் இல்லை பிரச்சனை. கமலுடன் தன்னை பிணைத்து கொண்டுள்ள நண்பனின் ஈகோ தான் விவாதத்திற்கு உரியது. அவனால் இதை விட்டு வெளியேற முடியாது.
இது போலவே மத நம்பிக்கையாளர்களும் மதம் தாக்கப் படும் போது மனம் தாக்கமடைந்து எதிர் தரப்பில் வன்முறை பிரயோகிக்கின்றனர். சாதி, மொழி, இன பிரச்சனையும் அஃதே.
தெளிவடைவோம் ! சுயத்தை அடைவோம் !!
2 weeks ago
No comments:
Post a Comment